​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த தயார் - இம்ரான்கான்

Published : Jan 17, 2020 4:16 PM

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த தயார் - இம்ரான்கான்

Jan 17, 2020 4:16 PM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த தயார் என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

ஜெர்மன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுடன் இருக்க வேண்டுமா அல்லது தனிநாடாக செல்வதா என்பது குறித்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே முடிவு செய்வதே சிறந்தது என்றும், இதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மனித உரிமைகள் குறித்து செய்தியாளர் கேட்டபோது, உலகின் எந்த மூலையிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்யலாம் என இம்ரான்கான் கூறினார்.

இந்தியாவில் மோடி அரசுடன் பேச்சு நடத்த தாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் காரணமாக இந்தியா பேச்சுநடத்த முன்வரவில்லை என்றும் இம்ரான்கான் கூறினார்.