​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும் - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Jan 17, 2020 12:48 PM

நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும் - அமைச்சர் ஜெயக்குமார்

Jan 17, 2020 12:48 PM

முரசொலி, துக்ளக் பற்றி நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு சர்ச்சையான நிலையில், நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால், சிறுபான்மை மக்களை திசை திருப்பும் அரசியல் நடைபெற்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதே அதிமுகவின் லட்சியம் என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என்றும் அவர் கூறினார்.
அதிமுக நாளேடு குறித்து ரஜினி பேசாதது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்த ஜெயக்குமார், நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும் என்றார்.