​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய உரிமையாளர் மர்ம மரணம்

Published : Jan 17, 2020 12:05 PM

தனியார் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய உரிமையாளர் மர்ம மரணம்

Jan 17, 2020 12:05 PM

திருச்சியில் தனியார் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய உரிமையாளர் ஒருவர், நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலைய சந்தோஷ் நகரைச் சேர்ந்தவரான 31 வயதான சசிகுமார் , தனது வீட்டின் அருகே பார்ன் சூட்டிங் கிளப் (born shooting club) எனும் பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அங்கு இன்று காலை 10 மணியளவில்  நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் இறந்து கிடந்தார்.

தகவலின்பேரில் சசிகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய விமானநிலைய போலீஸார், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.