​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.1 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு தினக்கூலி ஒருவருக்கு ஐடி நோட்டீஸ்

Published : Jan 17, 2020 10:44 AM



ரூ.1 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு தினக்கூலி ஒருவருக்கு ஐடி நோட்டீஸ்

Jan 17, 2020 10:44 AM

1 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு, மகாராஷ்டிராவில் தினக்கூலி ஒருவருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் நகரில் வசிக்கும் பாவ்சாகிப் ஆஹிர், ஒரு தினக்கூலி. தனியார் வங்கியில் 58 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தது தொடர்பாக கடந்த செப்டம்பரில் ஆஹிருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

வங்கியை அணுகி விவரங்களை சரிபார்த்தபோது, மோசடியாக தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது ஆஹிருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி வருமான வரித்துறையிடம் இருந்து ஆஹிருக்கு மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீசில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, வங்கிக் கணக்கில் 56 லட்ச ரூபாய் மற்றும் 21 லட்ச ரூபாய் தனித்தனியே டெபாசிட் செய்ததாகவும், வரி பாக்கியாக 1 கோடியே 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆஹிர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.