​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி சட்டமன்றத் தேர்தல்: இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

Published : Jan 17, 2020 8:04 AM

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

Jan 17, 2020 8:04 AM

பாஜகவின் மத்திய தேர்தல் பணிக் குழு கூட்டம் நேற்றிரவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

டெல்லி வேட்பாளர்களுக்கான பட்டியலை இறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இன்று பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது