​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சம்பா நெற்பயிரை குலை நோய் தாக்கியதால் பதறாக மாறியது - விவசாயிகள் வேதனை

Published : Jan 17, 2020 7:58 AM

சம்பா நெற்பயிரை குலை நோய் தாக்கியதால் பதறாக மாறியது - விவசாயிகள் வேதனை

Jan 17, 2020 7:58 AM

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் குலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பிரதாபராமபுரம் கிராமத்தில்  சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில்  பிபிடி என்னும் நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெல் மணிகளோடு, 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குலை நோய் தாக்கி நெற்கதிர்கள் எல்லாம் பதறாக மாறி விட்டது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று திருக்குவளை கூட்டுறவு வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் விளைநிலங்களில் நேரடி ஆய்வு கொண்டார். அப்போது அவரிடம் தங்களின் வருவாய் இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.