​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு

Published : Jan 16, 2020 7:54 PM



டெல்லி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இம்ரான்கானுக்கு அழைப்பு - மத்திய அரசு

Jan 16, 2020 7:54 PM

டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் , ஷாங்காய் அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதை சுட்டிக்காட்டிய ரவீஷ்குமார், இது போன்ற நடவடிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் எதிர் காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.