​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

Published : Jan 16, 2020 5:45 PM



புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

Jan 16, 2020 5:45 PM

அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. விமர்சித்திருந்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார்.இதனிடையே டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் கட்சி தலைமையிடம் தனவேலு எம்.எல்.ஏ. செயல்பாடு குறித்து புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார்.