​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பங்குச்சந்தையில் ஏற்றம்...

Published : Jan 16, 2020 5:41 PM

பங்குச்சந்தையில் ஏற்றம்...

Jan 16, 2020 5:41 PM

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 932 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து, 42 ஆயிரத்து 59 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 355 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே நிப்டி 12 ஆயிரத்து 389 புள்ளிகள் வரை உயர்ந்தது.

தொலைதொடர்பு, வங்கி, நிதி துறை நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. அமெரிக்கா - சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது சந்தையின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து, 70 ரூபாய் 93 காசுகளாக அதிகரித்தது.