பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி
Published : Jan 16, 2020 3:57 PM
பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி
Jan 16, 2020 3:57 PM
பீகாரில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் நிதீஷ்குமார் தலைமையில் வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் வைசாலியில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக குறிப்பிட்டார். குடியுரிமை சட்ட திருத்தத்தை முஸ்லிம் சகோதரர்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக்கொண்டார். ராகுல்காந்தி, லாலு பிரசாத், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் போன்றவர்கள், தவறான தகவல்களை அளித்து மக்களை குழப்புவதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.