​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி நீக்கம்...

Published : Jan 16, 2020 3:38 PM

பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி நீக்கம்...

Jan 16, 2020 3:38 PM

பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்தண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் முக்கிய வீரர்களை, நான்கு பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும். அதில் ஏ ப்ளஸ்  பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாய், பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படும்.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், தோனியின் பெயர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இது எதிர்காலத்தில் இந்தியா அணிக்காக தோனி களம் இறங்குவாரா என்பதில் பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஏழு கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ ப்ளஸ் பிரிவில் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 5 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ பிரிவில் கே.எல் ராகுல், ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட பதினோறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா, சாஹல் உள்ளிட்ட 5 வீரர்கள் 3 கோடி ரூபாய் ஊதியம் பெறும் பி பிரிவிலும், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே உள்ளிட்ட 8 வீரர்கள் 1 கோடி ரூபாய் ஊதியம் பெறும் சி பிரிவிலும் ஒப்பந்தமாகியுள்ளனர்.