​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை அளிக்க உத்தரவு

Published : Jan 16, 2020 12:37 PM

பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை அளிக்க உத்தரவு

Jan 16, 2020 12:37 PM

பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை ஒப்படைக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிறந்த தேதி மாற்றம், பள்ளி முகவாண்மை, நிலம் மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பின் அதன் விவரங்களை இம்மாதம் 19ம் தேதிக்குள் ஒப்படைக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.