​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

Published : Jan 16, 2020 11:20 AM

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

Jan 16, 2020 11:20 AM

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜெயஸ்ரீ தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரே கட்டிடத்தில் மேல் மற்றும் கீழ் வீடுகளில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் ஈஸ்வர் தன்னை தாக்கியதாக ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரை அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து ஈஸ்வர் - ஜெயஸ்ரீ இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ வசித்து வந்த வீட்டிற்கான மின்சாரம், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஜெயஸ்ரீ கிரடிட் கார்ட் மூலமாக ஈஸ்வர் வாங்கிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் ஜெயஸ்ரீயை தொடர்பு கொண்தாக சொல்லப்படுகிறது- இந்நிலையில் ஜெயஸ்ரீ திடீரென மாயமாகியுள்ளார். அவரை நண்பர்கள் தேடி வந்த நிலையில், நீலாங்கரை கிழக்குக் கடற்கரை சாலையின் ஒரு இடத்தில் ஜெயஸ்ரீயின் கார் சாலையோரமாக நின்றுகொண்டிருந்ததைக் கண்ட அவரது நண்பர்கள் உள்ளே பார்த்த போது காருக்குள் ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டது தெரியவந்தது. மேலும் தனது தற்கொலை முடிவு குறித்து அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் காரில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஈஸ்வர் மற்றும் அவரது தாய் - தந்தை மீது ஜெயஸ்ரீயின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.