​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக விமர்சனத்தை காங்கிரஸ் எப்படித்தான் தாங்கி கொள்கிறதோ? - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Jan 16, 2020 11:15 AM

திமுக விமர்சனத்தை காங்கிரஸ் எப்படித்தான் தாங்கி கொள்கிறதோ? - அமைச்சர் ஜெயக்குமார்

Jan 16, 2020 11:15 AM

கூட்டணி குறித்த திமுகவின் விமர்சனத்தை காங்கிரஸ் கட்சியினர் எப்படித்தான்  தாங்கி கொள்கிறார்களோ என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தன்மானமிக்கவர்களா என்பதை காங்கிரஸார்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் தமிழக அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திருவள்ளுவர் சாதி, மதம், இனம், மொழி கடந்தவர் என்றும், சாதி வெறி, மத வெறி, இன வெறி, மொழி வெறி பிடித்தவர்கள் திருக்குறளை படித்தால் அவர்களின் வெறித்தனம் போய்விடும் என்றும் கூறினார். 

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p