​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்..

Published : Jan 16, 2020 10:33 AM

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்..

Jan 16, 2020 10:33 AM

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன் முறையாக 42 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கிய சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 42 ஆயிரத்து ஒன்பது என்ற சாதனை உச்சத்தை தொட்டது.

தேசிய பங்கு சந்தை நிஃப்டி, பூஜ்யம் இரண்டு ஐந்து சதவிகிதம் உயர்ந்து 12 ஆயிரத்து 377 புள்ளி எட்டு பூஜ்யம் என்ற சாதனை அளவில் வர்த்தகமானது. பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்லே, சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, பாரதி ஏர்டெல், பஜாஜ் அகியவற்றின் விலைகள் உயர்ந்தன. உயர்வை சந்தித்துக் கொண்டிருந்த இண்டஸ்இந்த் வங்கி சரிவை சந்தித்துள்ளது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p