​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்

Published : Jan 16, 2020 9:34 AM

ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்

Jan 16, 2020 9:34 AM

காஞ்சிபுரம் நகரில் ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேர், பட்டாகத்தியுடன் சென்று, 7 பேரை கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், ரவுடி தியாகுவின் வீடு, கார் போன்றவற்றை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், 2 இருசக்கர வாகனம், 4 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது.

அவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டேஸ்வரி உத்தரவிட்டிருக்கிறார். அண்மையில், 6 தனிப்படைகள் அமைத்து, மறைந்த தாதா ஸ்ரீதரின் ஓட்டுனர் தினேஷ் மற்றும் மைத்துனர் தணிகா மற்றும் தியாகு ஆகியோரின் கூட்டாளிகள் 56 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேர் அடி தடியில் ஈடுபட்டதோடு, வழிப்பறியும் செய்திருப்பது, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p