​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பென்னி குக் 179 -வது பிறந்த நாள் : சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.மரியாதை

Published : Jan 15, 2020 5:59 PM

பென்னி குக் 179 -வது பிறந்த நாள் : சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.மரியாதை

Jan 15, 2020 5:59 PM

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குக்கின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. ஆங்கிலேய பொறியாளரான பென்னிகுக் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.

பென்னிகுக்குக்கு கம்பம் லோயர் கேம்ப்பில் மணி மண்டபம் கட்டிய தமிழக அரசு, அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது. இன்று முதல் முறையாக கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பங்கேற்று பென்னிக்குக் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதனிடையே பென்னி குக்கின் மணி மண்டபம் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து ஐந்து மாவட்ட குடிநீரையும் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.