​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

Published : Jan 14, 2020 11:40 AM

குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

Jan 14, 2020 11:40 AM

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-ன் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 தீவிரவாதிகள், நேபாளத்துக்கு தப்பிச் சென்று அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவினர்.

அவர்களுள் மூவர் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களை தொடர்ந்து நான்காவதாக ஒரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டான். உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும், மீதமுள்ள இரு தீவிரவாதிகள் குடியரசு தினத்தன்று தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.