​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்கவில்லை - அமைச்சர்

Published : Jan 14, 2020 11:28 AM

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்கவில்லை - அமைச்சர்

Jan 14, 2020 11:28 AM

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதையடுத்து, புதித்தாக திறக்கப்பட்டுள்ள மைதானத்தில் மாணவர்களுடன் இணைந்து கைப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.