​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக சாகசம் செய்த அலாய்ன் ராபர்ட்

Published : Jan 14, 2020 9:35 AM

ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக சாகசம் செய்த அலாய்ன் ராபர்ட்

Jan 14, 2020 9:35 AM

மிகவும் உயரமான கட்டடங்களில் அனாயசமாக ஏறுவதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் ஸ்பைடர் மேன் என்று பெயர் பெற்றவர் அலாய்ன் ராபர்ட், இதற்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

இந்த முறை பொதுநல நோக்கத்துடன் பாரிஸ் நகரின் மிக உயரமான ஒரு கண்ணாடி மாளிகையில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஏறினார். ஓய்வூதியம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை ஆதரித்து அவர் கண்ணாடி மாளிகையில் ஏறி சாதனை படைத்தார். பிரமிப்புடன் பார்த்த பத்திரிகையாளர்களும் பொதுமக்களும், நல்ல நோக்கத்துடன் அவர் செய்த சாகசத்தை பாராட்டி வரவேற்றனர்.