​​ இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரை

இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரை

May 08, 2018 10:18 PM

இயேசுநாதர் குறித்து அவதூறாக பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது  கூறப்படும் புகாரில்  நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையருக்கு, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பேசிய இளையராஜா, இயேசு நாதர் உயிர்த்தெழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் என்பவர் சென்னை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸின் பேரில் நடவடிக்கை எடுத்து, அதன் மேல் விவரங்களை புகார் தாரருக்கு தெரிவிக்குமாறு காவல் ஆணையருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கடிதம் அனுப்பியுள்ளார்.