​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Published : Jan 13, 2020 9:35 PM

நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Jan 13, 2020 9:35 PM

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த காளிஸ்வரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மறைமுக தேர்தலின் போது தாமும், அதிமுக வேட்பாளரும் சம வாக்குகளை பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது அதிமுகவை சேர்ந்த சிலர் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை சூரையாடியதாகவும், இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மறுவாக்குப்பதிவு நடத்தவும், வழக்கறிஞர் குழு அமைத்து தேர்தலை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.