​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்திரக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

Published : Jan 13, 2020 9:26 PM

எந்திரக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

Jan 13, 2020 9:26 PM

ஸ்பைஸ்ஜெட் விமானம், எந்திரக் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து சென்னை வந்த ஸ்பைஜெட் விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.

உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் வருகை புறப்பாடு நிறுத்தப்பட்டு, வாரனாசியிலிருந்து வந்த விமானத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மேலும், தீயணைப்புவீரர்கள், மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பின்னர், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு, 142 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் திறமையால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.