​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்குவாரா?

Published : Jan 13, 2020 7:19 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்குவாரா?

Jan 13, 2020 7:19 PM

பயிற்சியின்போது பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்குவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் 14-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி துணை கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளார். பயிற்சியின்போது பந்து தாக்கியதில் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் விரலில் ‘பேண்டேஜ்’ போட்டுவிட்டார். இதனால் தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.