​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதலிடம்

Published : Jan 13, 2020 6:57 PM

காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதலிடம்

Jan 13, 2020 6:57 PM

காவல் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண புள்ளிவிபரத்தில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதிகளின் பலி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களில், 13 பேர் உயிர் இழந்தாக கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அளவில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதே கால கட்டத்தில் தமிழகத்தில், 12 பேர் விசாரணையின் போது காவல் நிலையத்தில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.