​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது நிப்டி..

Published : Jan 13, 2020 6:06 PM

இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது நிப்டி..

Jan 13, 2020 6:06 PM

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி இன்று புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 860 புள்ளிகளாக அதிகரித்தது.

நிப்டி இதுவரை இல்லாத அளவாக 72 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 329 புள்ளிகளாக அதிகரித்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாயின.

தொழில்துறை உற்பத்தி எதிர்மறையில் இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் 1.8 சதவீதம் உயர்வடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தல் இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 86 காசுகளாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 25 ரூபாய் குறைந்து 4177 ரூபாயாக இருந்தது.