​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published : Jan 13, 2020 10:01 AM

ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

Jan 13, 2020 10:01 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமோகமாக நடைபெற்று வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக, மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

ஆம்பூர், உமராபாத் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், வீடுகளிலும், வயல்வெளி பகுதிகளிலும் பெண்களே கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலானது.

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை வாங்க கூலித்தொழிலாளிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொங்கலையொட்டி விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து கள்ளச்சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p