​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குப்பதிவில் முறைகேடு இல்லை - அன்புமணி ராமதாஸ்

Published : Jan 12, 2020 9:42 PM

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குப்பதிவில் முறைகேடு இல்லை - அன்புமணி ராமதாஸ்

Jan 12, 2020 9:42 PM

உள்ளாட்சித் தேர்தல் மறைமுக வாக்குபதிவில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் பா.ம.க. சார்பில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரும்பு, மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதனை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக வாக்குகளுடன் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதால், மறைமுக தேர்தலில் திமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.