​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

Published : Jan 12, 2020 6:40 PM

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

Jan 12, 2020 6:40 PM

ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் ஜான்சன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ், அறிவுடைநம்பி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, தான் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.