​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபரீதம்

Published : Jan 12, 2020 4:27 PM

முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபரீதம்

Jan 12, 2020 4:27 PM

வேலூரில் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற நபர், எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விழுந்து படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காட்பாடியில் இருந்து தொரப்பாடி வழியாக பாகாயம் செல்லும் DR என்ற பேருந்து வேலூர் பேருந்து நிலையத்துக்குள் செல்வதற்காக அணுகு சாலை வழியே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை பின் தொடர்ந்தவாறு இருசக்கர வாகனத்தில் மேல் விசாரத்தைச் சேர்ந்த ஜியாதுல்லா என்பவர் வந்துகொண்டிருந்தார்.

திடீரென அரசுப் பேருந்தை அவர் முந்த முயன்றபோது தனியார் பேருந்தின் மீது மோதி கீழே விழுந்தார். இந்தக் காட்சிகள், அந்தப் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன.

காயமடைந்த ஜியாதுல்லா சுயநினைவை இழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜியாவுதுல்லா தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.