​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விபத்தில் உயிரிழந்த அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

Published : Jan 12, 2020 2:46 PM

விபத்தில் உயிரிழந்த அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

Jan 12, 2020 2:46 PM

வாகன விபத்தில் உயிரிழந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை அருகே பொலிரோ காரில் சென்றபோது சாலையோர மரத்தில் வாகனம் மோதி இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இறந்தோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்துகொடுக்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கரை தொலைபேசியில் தான் கேட்டுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.