​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் அதிகாரியின் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Published : Jan 12, 2020 2:39 PM

காவல் அதிகாரியின் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Jan 12, 2020 2:39 PM

காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன பின்னும் ஒரு அனுதாபம் கூட தெரிவிக்காத ஸ்டாலின், நேரடியாக சென்று பெயரளவில் 5 லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு வழங்கியதாகவும், பின்னர் காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என ட்விட்டரில் பதிவிட்டு, காவல் அதிகாரியின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டிருப்பதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.