​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து -8 பேர் பலி

Published : Jan 12, 2020 8:27 AM

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து -8 பேர் பலி

Jan 12, 2020 8:27 AM

மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கரில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள அங்க் பார்மா என்ற ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. மிகப்பெரிய வெடிப்புச் சத்தமும் அக்கம் பக்கம் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது. இதனால் ஆலையின் சில பகுதிகள் தகர்ந்தன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.ஆயினும் 13 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என்று பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.