​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சிக்கினர்

Published : Jan 11, 2020 8:27 PM

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சிக்கினர்

Jan 11, 2020 8:27 PM

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், மேலும் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள இடிச்சக்கபிலாமூடு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.  சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, 2 பேரிடம், குற்றவாளிகள் இருவரும் பேசியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரும், விசாரணை நடத்துகின்றனர்.  இந்நிலையில், மேலும் 15-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையே, குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.