​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல்கள் பதிவானதால் பரபரப்பு

Published : Jan 11, 2020 7:50 PM

திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல்கள் பதிவானதால் பரபரப்பு

Jan 11, 2020 7:50 PM

திருப்பூர் அருகே  சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளதையடுத்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாதுகாப்பு கருதி இந்தியாவில் சேட்டிலைட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் சேட்டிலைட் போனின் சிக்னல்கள் பதிவாகி உள்ளன. 

சேட்டிலைட் போனை பயன்படுத்தியது யார்? பனியன் தொழிலாளர்கள் என்ற போர்வையில் திருப்பூரில் தீவிரவாதிகள் தங்கியுள்ளனரா?  எந்த நாட்டில் உள்ளவர்களிடம் பேசப்படுகிறது? உள்ளிட்டவை குறித்து  உளவுப்பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரிவு பிரான்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயத்தில், தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.