​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரௌத்திரம் பழகு என்பது போல் அரசியலும் பழக வேண்டும் - கமல்ஹாசன்

Published : Jan 11, 2020 7:08 PM

ரௌத்திரம் பழகு என்பது போல் அரசியலும் பழக வேண்டும் - கமல்ஹாசன்

Jan 11, 2020 7:08 PM

இனி வரும் அரசியல் வாதிகள் தம்மைப்போல் இருக்க வேண்டுமென மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் ஐடா வளாகத்தில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் பேசிய அவர், அரசியல்வாதிகள் கூறும் குட்டிக்கதைகளை கைதட்டி கேட்டு விட்டு, எதிர்த்து கேள்விக்கேட்க மறந்து விட்டோம் என்றார்.

மேலும், தங்க பிஸ்கெட்டிற்கும், சாப்பிடும் பிஸ்கெட்டிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளதாக குறிப்பிட்ட அவர், ரௌத்திரம் பழகு என்பது போல் அரசியலும் பழக வேண்டும் என்றார்.