​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அணியை வென்று காட்ட ஆஸ்திரேலிய அணி சூளுரை

Published : Jan 11, 2020 7:08 PM

இந்திய அணியை வென்று காட்ட ஆஸ்திரேலிய அணி சூளுரை

Jan 11, 2020 7:08 PM

காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என அந்நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் கூறி உள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆரோன் பிஞ்ச், இந்திய அணியை சொந்த மைதானத்தில் எதிர்கொள்வது சிரமமான ஒன்று தான் என்றார்.

ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயால் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளதாக கூறிய அவர், ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம்“ என்றார்.