​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Published : Jan 11, 2020 6:31 PM

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Jan 11, 2020 6:31 PM

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட ஊராட்சியில் அதிமுக, திமுகவை சேர்ந்த தலா 8 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருந்தது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ஐ.ஜே.கே. கட்சியை சேர்ந்த ஆரோக்ய சாந்தராணியை காணவில்லை என புகார் எழுந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் அவருடன் சாந்தராணி மற்றும் திமுக உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அறையில் வைத்து அவர்களை போலீஸார் பூட்டினர்.

இதேபோல் அதிமுகவுடனும் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.