​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதார நிலையில் இலங்கை தமிழர்கள் இன்னும் மேம்படவில்லை

Published : Jan 11, 2020 5:22 PM

பொருளாதார நிலையில் இலங்கை தமிழர்கள் இன்னும் மேம்படவில்லை

Jan 11, 2020 5:22 PM

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும், பொருளாதார நிலையில் இலங்கை தமிழர்கள் இன்னும் மேம்படவில்லை என அந்நாட்டின் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம், வி.ஐ.டி நிறுவனர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன், தமிழர்கள் மற்றும் அவர்கள் வாழும் பகுதிகளுக்கான வளர்ச்சி நிதியை, இலங்கை அரசு முறையாக வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டினார்.