​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட உத்தரவு

Published : Jan 11, 2020 4:12 PM

அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட உத்தரவு

Jan 11, 2020 4:12 PM

தமிழ்நாட்டில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னையை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க நிலம் மற்றும் நிலத்தடி நீர்வள புள்ளிவிவர மைய தலைமைப் பொறியாளர் பிரபாகரனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மூடப்பட்ட ஆலைகள் அனுமதி பெற்றாலும் நீதிமன்ற அனுமதியில்லாமல் மீண்டும் இயக்க அனுமதிக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.