​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்தில் தீ விபத்து -20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Published : Jan 11, 2020 8:26 AM

பேருந்தில் தீ விபத்து -20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Jan 11, 2020 8:26 AM

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் விபத்தில் சிக்கிய பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

70 பயணிகளுடன் ஜெய்ப்பூர் நோக்கி  சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து எதிரே வந்த சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்துடன் மோதி விபத்துக்குள்ளானதால்  தீப்பிடித்தது. பேருந்தில் இருந்த பயணிகள் உயிருக்குப் போராடியபடி கூக்குரலிட்டனர்.

பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடி மீட்புப் பணியை மேற்கொண்டனர். பேருந்தில் சிக்கிய பயணிகளில் 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.மேலும் சில பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். 

இந்த விபத்தில் தீயில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.