​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் குண்டு வீசியதாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது

Published : Jan 11, 2020 8:20 AM

பெட்ரோல் குண்டு வீசியதாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது

Jan 11, 2020 8:20 AM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமுதி ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் திமுகவினர் ஒரு தேமுதிக மற்றும் 2 சுயேட்சைகள் உட்பட 10 கவுன்சிலர்களை அழைத்துச் சென்று, தேவகோட்டை அருகே உள்ள புதுக்குறிச்சி என்ற கிராமத்தில் ஜெகநாதன் என்பவரது வீட்டில் தங்க வைத்துள்ளனர். இதையறிந்து தேமுதிக கவுன்சிலரை மீட்பதற்காக அதிமுகவை சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது ஆட்களுடன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட மோதலில் அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசி, திமுகவினரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், 4 கார்களும் சேதமடைந்தன. இதுதொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.