​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடமாநிலங்களில் தொடர்ந்து நிலவும் பனி மூட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Published : Jan 10, 2020 6:52 PM

வடமாநிலங்களில் தொடர்ந்து நிலவும் பனி மூட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Jan 10, 2020 6:52 PM

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 23 ரயில்களின் பயணம் தாமதமானது. டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது.

பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கும் நிலை காணப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக 23 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே கடும் குளிர் காரணமாக பல ஊர்களில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.