​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நன்கொடையாளர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பள்ளி நிர்வாகம்

Published : Jan 10, 2020 3:34 PM

நன்கொடையாளர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பள்ளி நிர்வாகம்

Jan 10, 2020 3:34 PM

நாகை அருகே அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 450 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 65 பேர் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து சுமார் 30க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் உதவியுடன் அந்த 65 மாணவர்களுக்கும் பொங்கல், வெண்பொங்கல், இட்லி போன்ற உணவுகளோடு கூடிய காலை உணவு வழங்கும் திட்டத்தை பள்ளி நிர்வாகம் தொடங்கியுள்ளது.