​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள் திருட்டு

Published : Jan 10, 2020 11:20 AM

பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள் திருட்டு

Jan 10, 2020 11:20 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமனின் வீடு உள்ளது. இவரது சகோதரர் மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 400 சவரன் நகைகளை பீரோவில் பூட்டிவைத்துவிட்டு வியாழக்கிழமை கணவன், மனைவி இருவரும் அழைப்பிதழ் வைக்க வெளியூர் சென்றுள்ளனர்.

திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டும் உள்ளே இருந்த பீரோவில் கள்ளச்சாவி போட்டு திறந்தும் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.