​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தகங்கள் இல்லையென்றால் மனித குலம் வளர்ச்சி அடைந்திருக்காது - முதலமைச்சர்

Published : Jan 09, 2020 7:38 PM

புத்தகங்கள் இல்லையென்றால் மனித குலம் வளர்ச்சி அடைந்திருக்காது - முதலமைச்சர்

Jan 09, 2020 7:38 PM

அடுத்த ஆண்டு முதல் புத்தக காட்சிக்கு 75 லட்சம் ரூபாய், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும், 43-வது புத்தக காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து சிறந்த எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், உடலுக்கு உடற்பயிற்சி எப்படி அவசியமோ, அதுபோல மனப்பயிற்சிக்கு புத்தக வாசிப்பு அவசியம் என்றார்.

மேலும், ஆண்டு தோறும் புத்தக காட்சிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆரோக்கியாமான சமுதாயம் அமைய வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.