​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தர்பார் படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published : Jan 09, 2020 4:28 PM

தர்பார் படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

Jan 09, 2020 4:28 PM

இணையதளங்களில் தர்பார் திரைப்படம் திருட்டுத் தனமாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, இணைய சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தர்பார் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தாக்கல் செய்த  மனு,  நீதிபதி ஜெயசந்திரன் முன்பு  விசாரணைக்கு வந்தது. திருட்டுத் தனமாக இணையதளங்களில் தர்பார் படம் வெளியிடப்பட்டால் மனுதாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், இணையதளங்களில் அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் லைக்கா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து திருட்டுத் தனமாக திரைப்படங்களை வெளியிடும் 1370 இணையதளங்களில் தர்பார் படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.