​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஐ.ஐ.டி.யில் மூடப்பட்ட காந்தி சாலை நுழைவாயில் மத்திய அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை

Published : Jan 09, 2020 12:39 PM

சென்னை ஐ.ஐ.டி.யில் மூடப்பட்ட காந்தி சாலை நுழைவாயில் மத்திய அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை

Jan 09, 2020 12:39 PM

சென்னை ஐ.ஐ.டி.யில் மூடப்பட்ட வேளச்சேரி காந்தி சாலை நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் சென்னை ஐ.ஐ.டி.யில் பிரதான வாயிலை தவிர்த்து மூன்று நுழைவாயில்கள் உள்ளன.

இதில் வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள நுழைவாயிலை அப்பகுதி மக்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்வதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்தனர். இந்த கேட் மூடப்பட்டதால் மக்கள் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாகவும், அதனை திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறும் தி.மு.க. உறுப்பினர் வாகை சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து, மத்திய அரசின் உத்தரவை பெற்று மூடப்பட்ட நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.