​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்

Published : Jan 09, 2020 9:37 AM

தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்

Jan 09, 2020 9:37 AM

நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேரை, தமிழக கியூ பிரிவு போலீசார் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

மதவாத செயல்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பல் இதே போன்று பெங்களூருவில் செயல்பட்டு வரும் மற்றொரு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிடைத்த தகவல்களைக் கொண்டு பல்வேறு மாநில போலீசாரின் உதவியுடன் களமிறங்கிய போலீசார், தமிழகத்தில் 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து பெங்களூருவில் வைத்து முகமது ஹனீப்கான், அப்துல் சுபனால்,  இம்ரான்கான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p