​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
13ம் நூற்றாண்டை சேர்ந்த அம்மன் சிலை மீட்பு

Published : Jan 08, 2020 5:42 PM

13ம் நூற்றாண்டை சேர்ந்த அம்மன் சிலை மீட்பு

Jan 08, 2020 5:42 PM

சேலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால அம்மன் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் ஒப்படைக்கப்பட்டது.

கெங்கவல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரன் பஞ்சலோக சிலையை வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவரின் இல்லத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து அம்மன் சிலையை கண்டுபிடித்து மீட்டனர். அந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு நீதிபதி முன் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Watch More ON : https://bit.ly/35lSHIO